அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப் போவதாக வாட்ஸ்அப்பில் மிரட்டல் விடுத்த பண்ருட்டி வாலிபர் சவுகத்அலி என்பவரை பண்ருட்டி போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cuddalore999.jpg)
கரோனா தடுப்பு நடவடிக்கைகளாக ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலில் இருக்கும் நிலையில், அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டம் நடத்த போவதாகப் பண்ருட்டியைச் சேர்ந்த சவுகத் அலி என்ற வாலிபர் மிரட்டல் விடுத்து வாட்ஸ் அப் மூலம் பதிவிட்டு இருந்தார்.
இது பற்றி தகவலறிந்த,கடலூர் எஸ்.பி அபிநவ்ஸ்ரீ உத்தரவு படி, டி.எஸ்.பி நாகராஜன், இன்ஸ்பெக்டர்சண்முகம் ஆகியோர் இவரை அதிரடியாக கைது செய்து பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி கற்பகவள்ளி உத்தரவிட்டார்.அதனைத் தொடர்ந்து கடலூர் மத்தியச் சிறையில் சவுகத் அலி அடைக்கப்பட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)