Advertisment

பட்டாக் கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்கள்!

பட்டாக் கத்தியால் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisment

Cuddalore District,

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த ஊமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் அப்பகுதியில் உள்ள ஐடிஐயில் படித்து வருகிறார். 15.04.2020 புதன்கிழமை இவருக்குப் பிறந்த நாள். அன்று இரவு அவரது வீட்டருகே உள்ள மாரியம்மன் கோவில் முன்பு இரு சக்கர வாகனங்களை நிறுத்தி தேவேந்திரன், விக்னேஷ் உள்ளிட்ட 8 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டாக்கத்தி மூலம் கேக் வெட்டி தேவேந்திரனுக்குப் பிறந்தநாள் விழா கொண்டாடியுள்ளனர்.

Advertisment

மேலும் இதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பரவவிட்டுள்ளனர். இதையடுத்து ஊமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேவேந்திரன், விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட மற்றவர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

CELEBRATING birthday District Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe