cuddalore district wife function husband incident

Advertisment

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே பு.உடையூர் கிராமத்தில் வசித்து வருபவர் தமிழரசன். இவர் இன்று (17/10/2021) அதே கிராமத்தில் உள்ள வயலுக்கு சென்றுள்ளார். மின்கம்பி வயலில் அறுந்துக் கிடந்தது தெரியாமல் மின் கம்பியை மிதித்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். தகவலறிந்து வந்த புவனகிரி காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன

இதனிடையே, இன்று (17/10/2021) அவரது மனைவிக்கு சீமந்தம் நடைபெற இருந்த நிலையில் எதிர்பாராத நிலையில் மின்கம்பியில் சிக்கி பலியான சம்பவம் தமிழரசன் குடும்பம் மற்றும் அல்லாமல் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிராமம் முழுவதும் தாழ்வான மின்கம்பி பல இடங்களில் செல்கிறது. இது குறித்து மின்துறை அதிகாரியிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் மின்துறையின் அலட்சியத்தால் தமிழரசன் உயிர் இழந்ததாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.