மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றிய பொதுமக்கள்! 

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் நகராட்சிக்கு உட்பட்ட செல்வராஜ் நகர் விவேகானந்தர் தெரு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஒன்றரை வருடமாக அப்பகுதியில் உள்ள தெரு மின் கம்பங்களில் மின்விளக்குகள் எரியாததால், இரவு நேரங்களில் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாவதாகவும், இரவு நேரங்களில் விஷ பூச்சிகளுக்கு அச்சப்பட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் வாழ்ந்து வருவதாகவும் கூறுகின்றனர்.

f

இதனால் அவதியடைந்த அப்பகுதி மக்கள் மின்கம்பங்களில் மின் விளக்கு அமைத்து தரக்கோரி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில், மின்கம்பங்களில் மின் விளக்கு இல்லாமல் அப்பகுதி இருட்டாக இருக்கும் காரணத்தால், மின் கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி இரவு 9 மணி வரை அந்த வெளிச்சத்தில் நடமாடி வருகின்றனர். இந்த அவல நிலையை போக்கி இப்பகுதியில் உள்ள மின் கம்பங்களில் உடனடியாக மின் விளக்கு அமைத்து தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Cuddalore
இதையும் படியுங்கள்
Subscribe