Cuddalore district virudhachalam Temple Trustee passes away

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள மேலப்பாளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தவலிங்க செல்வராயர் (60). இவர் அக்கிராமத்தில் உள்ள செல்லியம்மன், மாரியம்மன் கோவில்களுக்கு கடந்த 40 வருடத்திற்கும் மேலாக அறங்காவலராக நிர்வகித்து வருகிறார். இவருக்குத் திருமணமான மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

Advertisment

இந்நிலையில், இன்று (10.04.2021) காலை அக்கிராமத்தை சேர்ந்த விருத்தகிரி என்பவருக்கு சொந்தமான இடத்தில் தலையில் பலத்த காயங்களுடன், உடல் முழுவதும் ரத்தக் கறையுடன் மர்மமான முறையில் தவலிங்க செல்வராயர் இறந்துகிடப்பதாக கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினருக்கு அக்கிராம மக்கள் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர், தேர்தல் முன்விரோதம் காரணமாக அடித்துக் கொல்லப்பட்டாரா? முன் பகையால் அடித்துக் கொல்லப்பட்டாரா? நிலத்தகராறால் கொல்லப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். பின்னர் கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்ட பின்பு, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பினர். இச்சம்பவத்தால் அக்கிராமத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

Advertisment