cuddalore district virudhachalam issue police investigation started 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த தொரவலூர் கிராமத்தின் ஊராட்சி மன்றத்தலைவர் சங்கீதா அருளரசன். இவர்களின் மகள் ஓவியா (வயது 15) விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில், ஓவியாவின் பெற்றோர்மேல்மருவத்தூர் கோவிலுக்குச் சென்றதால், பள்ளியிலிருந்து அவர்களின் மகளை, வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக அதே ஊரைச் சேர்ந்த அவர்களின் உறவினரான குமாரசாமி என்பவர் தனது பேரனான தருணுடன் சென்றுள்ளார். இருசக்கர வாகனத்தில் மூவரும் தொரவளூர் கிராமத்தைநோக்கி சென்று கொண்டிருந்தனர்.

Advertisment

அப்போது நெய்வேலி என்.எல்.சி.யில் இருந்து சாம்பல் ஏற்றிக்கொண்டுகோயம்புத்தூர் நோக்கி செல்வதற்காக வந்து கொண்டிருந்த லாரி கோமங்கலம் கிராமத்தினருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மூவர் மீதும் மோதிமூன்று பேரின் தலையையும் நசுக்கி விட்டுநிற்காமல் சென்றுவிட்டது.இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக விருத்தாசலம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்க, விரைந்து வந்த காவல்துறையினர், மூன்று உடல்களையும் மீட்டுபிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை வேப்பூரில் காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். லாரியை ஓட்டிச் சென்ற டிரைவர் மணிகண்டனை காவல்துறையினர் பிடித்து விசாரித்தபோது அவர் அதிக மதுபோதையில் இருப்பது தெரியவந்தது.

Advertisment

cuddalore district virudhachalam issue police investigation started 

இதுகுறித்து விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சாலை விபத்தில் பள்ளி மாணவி உட்பட மூன்று பேர் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம்அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.