Advertisment

10 வருடங்களுக்கு பின் குழந்தை பெற்றெடுத்த தாய் உயிரிழந்ததால் பரபரப்பு!

cuddalore district virudhachalam government hospital

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்காவிற்கு உட்பட்ட புலிகரம்பலூர் கிராமத்தில் உள்ள பழைய காலனியைச் சேர்ந்தவர் இளஞ்செழியன்- கற்பகம் தம்பதியினர். இவர்களுக்குத் திருமணமாகி 10 வருடங்களுக்குப் பின்பு கற்பகம் கருவுற்றார்.

Advertisment

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விருதாசலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்ந்துள்ளனர். நேற்று முன்தினம் (16/05/2020) அரசு மருத்துவர்கள் மூலம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். குழந்தை நன்றாக ஆரோக்கியமாக இருந்து வந்த நிலையில், கற்பகம் எதிர்பாராத விதமாகச் சிகிச்சைப்பலனின்றி நேற்று (17/06/2020) மதியம் மகப்பேறு பிரிவில் உயிரிழந்தார்.

Advertisment

இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் துணைக்காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குச் சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் சுமார் 20- க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. பத்து ஆண்டுக்குப் பிறகு பிறந்த குழந்தை,பெற்ற தாயின்றி தவிக்கும் நிலையறிந்துஇறந்துபோன கற்பகத்தின் உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.

hospital government virudhachalam Cuddalore district
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe