கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தலைமை அஞ்சலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நகரத் தலைவர் ரஞ்சித்குமார், மாவட்ட பொதுக்குழுத் தலைவர் ராஜா, மாவட்ட துணைத்தலைவர் இளங்கோ மணி, மற்றும் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது இலவச மின்சாரம் பயன்படுத்தும் விவசாயிகளிடம் டெபாசிட் செலுத்தக் கூறும் மாநில அரசையும், புதிய மின் திட்டம் மூலம் இலவச மின்சாரத்தைத் தடுக்க நினைக்கும் மத்திய அரசையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். அதைத் தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்களை விருத்தாசலம் காவல்துறையினர் கைது செய்தனர்.