வடலூரில் தனியார் பள்ளி மாணவன் மர்ம மரணம்! உறவினர்கள் சாலை மறியல்! 

கடலூர் மாவட்டம் அயன் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் சங்கர் என்பவரின் மகன் விடுதலைசெல்வன். வடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதலைசெல்வன் 9- ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்நிலையில் இன்று (11.02.2020) காலை மாணவன் விடுதலைசெல்வன் வழக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளான். இந்நிலையில் விடுதலைசெல்வன் பள்ளியின் அருகாமையில் உள்ள கிணறு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளான். இதனை பார்த்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கூறி, உயிரிழந்த மாணவனை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

CUDDALORE DISTRICT VADALUR PRIVATE SCHOOL STUDENT INCIDENT POLICE

தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவன் மர்மமாக உயிரிழந்துள்ளதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவறிந்து வந்த நெய்வேலி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் லோகநாதன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக கூறியதன் காரணமாக சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

CUDDALORE DISTRICT VADALUR PRIVATE SCHOOL STUDENT INCIDENT POLICE

இதையடுத்து மாணவனின் உடல் பிரேத பரிசோதனை, அதே மருத்துவமனையில் நடந்தது. இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பொதுமக்களின் சாலை மறியலால் கடலூர்- விருத்தாசலம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Cuddalore incident school student vadalore
இதையும் படியுங்கள்
Subscribe