கடலூர் லாரன்ஸ் ரோட்டில் உள்ள அரசு சுகாதார மருத்துவமனைக்கு வழி கேட்டும், கடலூர் ரயில்வே நிலையத்தின் அடிப்படை பிரச்சினைகளை வலியுறுத்தியும், ரயில் நிலையத்தை 'கடலூர்- திருப்பாதிரிப்புலியூர்' என பெயர் மாற்றிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திதென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அஜய்குமாரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் பான்பரி வியாபாரிகள் சங்கம், பொதுநல அமைப்புகள் ஆகியவற்றின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Advertisment

cuddalore district Thirupapuliyur railway junction name change request peoples request petition

கோரிக்கைகளை பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் மாதவன், கடலூர் நகர செயலாளர் அமர்நாத், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆளவந்தார், வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் நடராஜன், பக்கீரான் குரு ஆகியோர் கலந்து கொண்டனர்.