/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/250.jpg)
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஐ.பி.எஸ்., நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சரவணன் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட சரவணன் ஐ.பி.எஸ். ஒரு வேளாண்மை பொறியியல் பட்டதாரி ஆவார்.2001ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்த இவர் சிவகாசி, வேலூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்து சென்னையில் மயிலாப்பூர் துணை ஆணையராக பணிபுரிந்து வந்தார்.2011ம் ஆண்டு தமிழக அரசால் உத்தமர் காந்தி விருது வழங்க்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)