/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/wo3.jpg)
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மதகளிர் மாணிக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி தேன்மொழி (35), இவர் நேற்று வீட்டில் உள்ள மின் விளக்கை போடுவதற்காக சுவிட்சைப் போட்டு இருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே தேன்மொழி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)