விருத்தாசலம் அருகே  தனியார் பள்ளி வகுப்பறையில் 12- ஆம் வகுப்பு மாணவன் மர்ம மரணம்! 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன்- லதா தம்பதியினர். இவர்கள் கடலூர் சாலையில் பாத்திர கடை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆண், பெண் என இரண்டு பிள்ளைகள் உள்ளன. இவர்களது பையனான சதீஷ்குமார்(17) என்பவர் விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடியில் உள்ள செந்தில் மெட்ரிக்குலேஷன் எனும் தனியார் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

cuddalore district school student incident police

இந்நிலையில் இன்று வழக்கம் போல் காலை 07.00 மணிக்கு பள்ளிக்கு சென்ற சதீஷ்குமார் சிறப்பு வகுப்பு முடிந்த உடன் வகுப்பறையில் மயக்கம் அடைந்து விட்டதாக கூறி அவரது பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த அவனது பெற்றோர்கள் விரைந்து சென்று சதிஷை மீட்டு, அப்பள்ளியின் தாளாளர்க்கு சொந்தமான மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

cuddalore district school student incident police

ஆனால் அங்கு மருத்துவம் பார்க்க முடியாது என்று கூறியதாக அவனது தந்தை தெரிவிக்கின்றார். பின்னர் மகனை காப்பாற்ற அலைந்து திரிந்த பெற்றோர்கள் இறுதியாக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். எவ்வித நோயுமில்லாமல் நன்றாக பள்ளிக்கு சென்ற மகன் இறந்தவிட்ட செய்தி கேட்டதும், அவனது பெற்றோர்கள் கதறி துடித்தனர். மாணவனின் பெற்றோர்கள் கதறிய காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது. இதுகுறித்து விருத்தாசலம் காவல்துறையினர், ஆசிரியரால் மாணவன் தாக்கப்பட்டாரா? அல்லது மர்மமான நோயினால் இறந்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

cuddalore district school student incident police

அதேசமயம் 'அப்பள்ளியில் பணம், பணம் என்று நச்சரிப்பதாகவும், தன்னை போல் பல பெற்றோர்கள் இதே நிலைமைக்கு தள்ளப்பட்டதாகவும் கூறி கதறி அழுத சதீஷின் பெற்றோர்கள், தன் மகனின் சாவே இப்பள்ளியில் கடைசியாக இருக்க வேண்டும் என்றும், பள்ளியின் தாளாளர்க்கு சொந்தமான மருத்துவனைக்கு கொண்டு சென்ற போது, முதலுதவி அளித்திருந்தால் தனது மகனை காப்பற்றி இருக்கலாம் என்றும் கதறி துடிக்கின்றனர். பள்ளிக்குச் சென்ற மாணவன் இறந்த செய்தியால் விருத்தாச்சலம் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Cuddalore district incident private school students virudhachalam
இதையும் படியுங்கள்
Subscribe