Advertisment

தந்தை இறந்த நாளில் தாயும், மகனும் தற்கொலை!

 rented house

தந்தை இறந்த நாளில் தாயும், மகனும் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கடலூர் அருகேயுள்ள நத்தப்பேட்டையைச் சேர்ந்தவர் முத்து. விவசாயியான இவர் கடந்த 03.06.2019 அன்று உடல் நலக் குறைவினால் இறந்துவிட்டார். இவரது மனைவி லதா (60). இவரது மகன் சேதுராமன் (25). இவர்கள் இருவரும் கடலூர் நகரிலுள்ள கோண்டூர் சாய் நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

Advertisment

இந்நிலையில் நேற்று முத்துவுக்கு முதலாமாண்டு திதி என்பதால் திதி கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தினர். திதி கொடுப்பது குறித்து வீட்டின் உரிமையாளரிடமும், அக்கம்பக்கம் உள்ளவர்களிடமும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று லதாவின் வீடு பூட்டிக் கிடந்தது. வெகுநேரமாகியும் திறக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் வீட்டின் மாடியில் உள்ள லதாவின் வீட்டுக் கதவைத் திறந்து, உள்ளே சென்று பார்த்தார். அப்போது லதாவும், சேதுராமனும் இறந்து கிடந்தனர். அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் விஷபாட்டில் ஒன்று கிடந்தது. எனவே இரண்டு பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. பின்னர் இரண்டு பேரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் காவல்துறை விசாரணை செய்ததில் முத்துவின் மகன் சேதுராமன் வேலைக்குச் செல்லாமல் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாகத் தெரிகிறது. மேலும் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இருந்த லதா கடன் பிரச்சனையிலும் சிக்கியுள்ளார். அதனால்தான் கணவர் இறந்த அதே நாளில் லதாவும், அவரது மகனும் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

http://onelink.to/nknapp

தந்தை இறந்த நாளில் தாயும், மகனும் இறந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Police investigation incident Cuddalore district
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe