Advertisment

ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்! 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வீரப்பார் பகுதியிலிருந்து மினி லாரியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தி வருவதாக டி.எஸ்.பி சபியுல்லாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சபியுல்லா தலைமையில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வீரப்பெருமாநல்லூரில் மினி வேனில் கடத்திவரப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததுடன் போதைப் பொருட்கள் கடத்தி வந்த வீரப்பெருமாநல்லூர் நேரு வீதியைச் சேர்ந்த ஜெயபால் (வயது 45), போதைப் பொருள் விற்பனைக்குத் துணையாக இருந்த புதுப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் (வயது 40) ஆகியோரை கைது செய்தனர்.

Advertisment

அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் வீரப்பெருமாநல்லூரில் உள்ள ஜெயபால் வீட்டில் மூட்டை, மூட்டையாக புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதையடுத்து ஜெயபால் வீட்டில் சோதனை நடத்திய போலீஸார் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

Advertisment

police Cuddalore district
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe