கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. இங்கு இயற்கை அரணாக அமைந்துள்ள சதுப்பு நிலக்காட்டில் தமிழக சுற்றுலா மையம் சார்பில் அமைக்கப்பட்ட படகு குழாமில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் படகு சவாரி செய்து வந்தனர்.

Advertisment

cuddalore district pichavaram tourist place

இங்கு பல்வேறு நாடுகளில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் மகிழ்ச்சியாக படகு சவாரி செய்து வந்தனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த நிலையில் உலக நாடுகள் முழுவதும் கரோனா வைரஸ் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவின் பெயரில் இரண்டு வார காலம் வரும் 31- ஆம் தேதி வரை படகு சவாரியை நிறுத்தி வைத்துள்ளனர். பொதுமக்கள் யாரும் பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.