/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/peoples 456.jpg)
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வடக்கு தில்லைநாயகபுரம் கிராமத்தின் அருகே நஞ்சாங்குட்டை என்ற இடத்தில் கடந்த 50 ஆண்டுகளாக பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 21 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் மூன்று குடும்பங்களுக்கு மட்டுமே ரேசன் அட்டைகள் உள்ளது. மற்ற அனைவருக்கும் ரேஷன் கார்டு இல்லாததால் அரசு நிவாரணப் பொருட்கள் வாங்க முடியாத அவல நிலையில் வாழ்ந்து வருகின்றனர். ரேசன் கார்டு கேட்டு அரசுக்கு கோரிக்கை மனு அளித்தும் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஆனால் இந்த 21 குடும்பத்திலுள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு உள்ளது. குடிநீர் வசதியில்லை, ஒத்தையடி பாதையாக மண் சாலை மட்டுமே, சாலை வசதி இல்லை. பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கின்றனர். இவர்களுக்கு அரசு மாற்று இடம் வழங்கி வீடுகட்டி கொடுக்கவேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது கரோனா பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றோம் அரசு எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Follow Us