Advertisment

பெண்ணாடம் அருகே இன்று நடைபெற இருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்! 

cuddalore district pennadam child welfare officers marriage

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகேயுள்ள கொத்தட்டை கிராமத்தில் 16 வயதுள்ள ஒரு சிறுமிக்கும் 25 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு இன்று (24.08.2020) திருமணம் நடைபெற இருந்தது.

Advertisment

இந்நிலையில் 16 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெறுவது குறித்து கடலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு அமைப்புக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நேற்றிரவு (23.08.2020) குழந்தைகள் நலக்குழு இயக்குனர் ஹென்றிலாரன்ஸ் மற்றும் அதிகாரிகள் அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று, சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து குழந்தை திருமணம் நடத்தக்கூடாது எனவும், அது சட்ட விரோதம் எனவும், சட்டத்தை மீறி செயல்பட்டால் சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்து பெற்றோருக்கு அறிவுரை வழங்கி, சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்க அழைத்து சென்றனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்துவதற்கு கடலூரில் உள்ள அலுவலகத்திற்கு வந்து ஆஜராகும்படி கூறிச்சென்றனர்.

Advertisment

Officers Child marriage pennadam Cuddalore district
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe