/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/police 456988.jpg)
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பாதாள சாக்கடையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை காவல் துறையினரே மீட்டு விசாரணை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி நகரத்திற்கு உட்பட்ட தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பண்ருட்டி காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக, டி.எஸ்.பி. பாபுபிரசாத் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டபோது, பாதாள சாக்கடையின் பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது.
உடனடியாக, பண்ருட்டி காவல் நிலைய ஆய்வாளர் அம்பேத்கர் தானாக முன்வந்து சடலத்தில் கயிறு கட்டி காவலர்கள் உதவியுடன் மேலே இழுத்து விசாரணை மேற்கொண்டார்.
மருத்துவ உதவியாளர்கள் நகராட்சி துப்புரவு பணியாளர்கள்வரும்வரை காத்திருக்காமல் ஆய்வாளர் அம்பேத்கரின் துணிகரச் செயல் அப்பகுதி மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது.
அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. பின்பு, இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us