Advertisment

கடலூர்: பண்ருட்டி இரட்டைக் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம்! 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை சுண்ணாம்புகாரர் தெருவைச் சேர்ந்த ரவி மகன் மணிகண்டன் (26) மற்றும் மாரியப்பன் மகன் பாலாஜி (22) ஆகிய இருவரும் கடந்த (14.04.2020) நள்ளிரவில் நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த போது, அங்கு வந்த தஷ்ணாமூர்த்தி மகன் பாலு மற்றும் அவரது ஆதரவாளர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் மணிகண்டன் மற்றும் பாலாஜியைச் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியானார்கள்.

Advertisment

cuddalore district panruti incident police

இதுகுறித்து பண்ருட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுதட்க்ஷணாமூர்த்தி மகன்கள்பாலு (எ) ராமகிருஷ்ணன்(39), கருணாகரன் (எ) கருணாமூர்த்தி (40) மற்றும் ஆறுமுகம் மகன் அய்யப்பன், மாரிமுத்து மகன் அய்யப்பன் (25) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

Advertisment

இந்நிலையில் இவர்களின் குற்ற செய்கையைக் கட்டுபடுத்தும் நோக்கில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டார். அதையடுத்து 4 பேரும் குண்டர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

Cuddalore district goondas act incident Panruti police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe