ADVERTISEMENT

பண்ருட்டியில் வங்கிப் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்த மூவர் கைது!

08:19 AM Jul 10, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம், பண்ருட்டி எல்.என்.புரம் ஸ்டேட் பேங்க் நகரைச் சேர்ந்த தம்பதி சையதுகலில்- லட்சுமி. இவர்கள் ஒய்வு பெற்ற வங்கி அலுவலர்கள். இவர்களின் மகன் கமால்பாபு (வயது 19). இவர், தான் ஒரு வங்கி மேலாளர் எனக் கூறிக் கொண்டு 'பண்ருட்டி நார்த் பஜார் பாரத ஸ்டேட் வங்கி' என்று ஆவணங்களை போலியாக தயார் செய்து போலி ஸ்டாம்பு, பணம் போடும் படிவம், பணம் எடுக்கும் படிவம் எல்லாம் போலியாக தயாரித்து பண்ருட்டி நார்த் பஜார் பாரத ஸ்டேட் வங்கி என்ற போலி இணையத்தளத்தையும் உருவாக்கியுள்ளார்.

இதுபற்றி பண்ருட்டி கும்பகோணம் சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் முதன்மை மேனேஜர் வெங்டேஷ் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் வழக்குப் பதிவு செய்து கமால்பாபு மற்றும் இவருக்கு உடந்தையாக இருந்ததாக ஈஸ்வரி ஸ்டாம்ப் உரிமையாளர் மாணிக்கம் (52), அருணா பிரிண்டர்ஸ் உரிமையாளர். குமார் (42) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT