Advertisment

வாய்க்காலில் இளைஞரின் சடலம்! காவல்துறையினர் தீவிர விசாரணை!!

CUDDALORE DISTRICT NLC CANAL YOUTH INCIDENT POLICE

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள சிறுவரப்பூர் பேருந்து நிறுத்தம் அருகே என்.எல்.சி இரண்டாவது சுரங்கத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்லும் வாய்க்கால் அமைந்துள்ளது. விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் இப்பாசன வாய்க்காலில் உள்ள தண்ணீரில் பெரியகோட்டுமுளை கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை- மலர்கொடி தம்பதியினரின் இரண்டாவது மகனான செல்லத்துரை என்பவரின்சடலம் முகத்தில் காயங்களுடன் இறந்த நிலையில் மிதந்தது.

Advertisment

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் கம்மாபுரம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த கம்மாபுரம் காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இறந்து போன இளைஞர், அதிகளவில் மது குடிக்கும் பழக்கம் உடையவர் என்பதால், மது போதையில் விழுந்திருப்பாரா? அல்லது யாராலாவது அடித்துக் கொல்லப்பட்டரா? எனப் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

canal Cuddalore district NLC PLANT police Youth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe