/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/NLC2222.jpg)
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இரண்டாவது அனல் மின் நிலையத்தின் 5- ஆவது அலகின் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அப்பகுதியில் பணியாற்றிய ஒருவர் பலியானதாகவும்,13 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும், 5 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் விபத்தில் சிக்கியுள்ள ஊழியர்களை மீட்கும் பணியையும், தீயை அணைக்கும் பணியையும் முடுக்கிவிட்டுள்ளனர். விபத்தில் தீ காயமடைந்தவர்களை மீட்டு என்.எல்.சி. பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/VLC3333.jpg)
கடந்த ஏப்ரல் மாதம் 08- ஆம் தேதி இதே இரண்டாவது அனல்மின் நிலையத்தில் 6- ஆவது அலகின் பாய்லர் வெடித்ததில் 6 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் 5- ஆவது அலகில் விபத்து நிகழ்ந்துள்ளது தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us