Advertisment

குழந்தை உயிரிழந்த வழக்கு; போலீசாரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி தப்பிய கும்பல்

cuddalore district neyveli five years child incident 

Advertisment

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த தொப்புளிகுப்பம் கிராமத்தில் கமலம், அவரது மகள் அஞ்சலை மற்றும்மகன் அருள்முருகன் ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கமலத்தின் வீட்டில் வேலை செய்த உக்காண்டி-ராஜேஸ்வரி தம்பதியின் இரண்டாவது மகளான 5 வயதுபெண் குழந்தை, முதனை கிராமத்தின் அருகே உள்ள முந்திரிக்காட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் கமலம், அஞ்சலை மற்றும்அருள்முருகன் ஆகியோர் மீது வழக்குபதிந்துநீதிமன்றத்தில் கடந்த இரண்டு வருடங்களாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சேத்தியாத்தோப்பு அடுத்த கரைமேடு கிராமத்தை சேர்ந்த பிரதாப் மற்றும் அவரது கூட்டாளிகள் தொப்புளிகுப்பத்தில் உள்ள கமலம் மற்றும் அவரது மகள் அஞ்சலையை கொலை செய்வதற்காக இன்று அதிகாலை வந்துள்ளனர். இதுகுறித்து முன்னதாகவே தெரிந்து கொண்ட கமலம் மற்றும் அவரது மகள் அஞ்சலை காவல்துறையினருக்கு தகவல் அளித்ததால் எஸ்.ஐ. அழகிரி தலைமையிலான கிரைம் போலீசார் கமலம் வீட்டில் பதுங்கி இருந்தனர்.

அப்போது கமலத்தின் வீட்டிற்குள் புகுந்த பிரதாப் மற்றும் அவரது கூட்டாளிகள் கமலம் மற்றும் அவரது மகள் அஞ்சலையை மிரட்டிய போது, மறைந்திருந்த காவல்துறையினர் அவர்களை பிடிக்க முற்பட்டனர். அப்போது திடீரென பிரகாஷ் என்பவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை பார்த்து சுட்டுவிடுவதாகக் கூறி, சினிமா பட பாணியில் துப்பாக்கி முனையில்காவல்துறையினரை மிரட்டிவிட்டு, அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவின் பேரில், துப்பாக்கி முனையில் போலீசாரை மிரட்டி தப்பித்தகுற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அஞ்சலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisment

அந்த புகாரில், தங்களது வீட்டில் வேலை செய்த தம்பதியினரின் குழந்தை மீனா கீழே தவறி விழுந்து உயிரிழந்தது.அவ்வழக்குக்கான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மீனாவின் பெற்றோர்சாட்சியம் அளித்துவிட்டனர். சாட்சி சொன்ன உக்காண்டி- ராஜேஸ்வரி ஆகிய இருவரையும் கடந்த இரண்டு வருடங்களாக மேலக்குப்பத்தை சேர்ந்த இளங்கோவன் மனைவி சுந்தரி என்பவரும், சுந்தரி உடன் திருமணம் தாண்டிய உறவில்இருக்கும் ரவிபிரகாஷ் என்பவரும்கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு 10 லட்ச ரூபாய் பணம், மூணு சென்ட் நிலம் தரம் வேண்டுமெனவும், அவ்வாறு தரவில்லை என்றால்,மறுபடியும் சாட்சிகளை மாற்றி சொல்ல வைப்போம் எனவும்,ஜாமீனை ரத்து செய்து விடுவோம்எனவும் மிரட்டியதாககுறிப்பிட்டுள்ளார். மேலும், அவ்வாறு பணம் தர மறுத்ததால் இன்று தங்களது வீட்டிற்குள் புகுந்துதுப்பாக்கியை காட்டிகொலைமிரட்டல் விடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். காவல்துறையினரை துப்பாக்கியை காட்டி மிரட்டி குற்றவாளிகள் தப்பித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Cuddalore child police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe