Advertisment

காதலிக்கு நிச்சயதார்த்தம்; விபரீத முடிவெடுத்த காதலன் 

cuddalore district lover engagement incident

காதல் தோல்வியால் இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம்கடலூரில் பெரும் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.

Advertisment

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வீரப்பெருமாநல்லூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் இளைஞர் ஒருவர் தன்உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அவரது உடல் முழுவதும் பலத்த தீக்காயம் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் அந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்சேர்த்தனர்.அந்த இளைஞருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் இளைஞர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

Advertisment

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் தீக்குளித்த இளைஞர் குறித்து விசாரணை செய்தனர். விசாரணையில், அந்த இளைஞர்சேலம் மாவட்டம் கோனேரிப்பட்டி மேட்டாங்காடு பகுதியைச் சேர்ந்த அங்கமுத்து என்பவரது மகன் நரேஷ் (வயது 30) என்பதுதெரியவந்தது. இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் வேலை பார்த்து வந்த கம்பெனியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் வேலை செய்துள்ளார். அப்போது நரேஷுக்கும் அந்த இளம்பெண்ணுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. இருவரும் சுமார் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காதலில் பிரிவு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

தற்போது அந்த இளம்பெண்ணுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். அதன்படி அந்த இளம் பெண்ணுக்கும் பண்ருட்டி அருகே உள்ள வீரப்பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கடந்த 14 ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இது பற்றி தகவல் அறிந்த நரேஷ் தனது காதலியை மறக்க முடியாத காரணத்தால் வீரப்பெருமாநல்லூர் பகுதிக்கு வந்தவர் சோகத்தில் அவரது உடலில் தானே பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து நரேஷின்தந்தை அங்கமுத்து போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் தோல்வியால் இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

cudalore kallakurichi lovers Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe