Advertisment

கள்ளக்காதலனை  அடித்து கொலை செய்த பெண் கைது! 

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரில் பத்து ஆண்டுகளாக கள்ளத்தனமாக குடும்பம் நடத்திவந்த காதலனை அடித்து கொலை செய்த பரிமளா என்ற பெண் கைது செய்யப்பட்டார்.

Advertisment

a

வடலூர் அருகிலுள்ள தென்குத்து கிராமத்தில் தனி வீட்டில் கள்ளத்தொடர்பில் அய்யாபிள்ளை, பரிமளா இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களிடையே இருந்த கள்ளத்தொடர்பில் கடந்த மார்ச் 13 அன்று பரிமளா அய்யாபிள்ளைக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே கோபத்தின் காரணமாக அய்யாப்பிள்ளையை பரிமளா அடித்து கொலை செய்து செப்டிக் டேங்க் உள்ளே போட்டு முடிவிட்டார்.

Advertisment

a3

இதனிடையே அய்யா பிள்ளையின் சகோதரர் தனது சகோதரர் காணவில்லை என வடலூர் காவல்நிலயத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வடலூர் காவல்துறை விசாரணை செய்ததில் பரிமளா கள்ளக் காதலனை அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

a

காவல்துறையின் விசாரணையில் கொலை செய்த இடத்தினையும், அய்யப்பிள்ளையின் உடலை கழிவு நீர் செப்டிக் டேங்கில் போட்டு மூடியதையும் ஒப்பு கொண்டார். அதன் பேரில் பிரேதத்தை உடல் கூறு செய்ய குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு போலிஸார் அனுப்பி வைத்தனர். பரிமளாவை கைது செய்து வழக்குப்பதிந்து சிறையிலடைத்தனர்.

murder Kurinjipadi Cuddalore district
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe