Advertisment

வழிப்பறி வழக்கில் பிரபல ரவுடி கூட்டாளிகளுடன் கைது!

Cuddalore district incident of Naveen called Poochi 

சென்னையின் பிரபல ரவுடி ஒருவர்வழிப்பறி வழக்கில் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னையில் பிரபல ரவுடியான நெற்குன்றம் சூர்யாவின் நெருங்கிய கூட்டாளி நவீன் என்கின்ற பூச்சி என்கின்ற ரத்னா சபாபதி (வயது 30). இவர் மீது 4 பேரை கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் உட்பட பல வழக்குகள் கொண்டவர். இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் சரித்திர குற்றவாளி பதிவேட்டில் உள்ள பாஸ்கர் மற்றும் மணிகண்டன், பாலகுரு ஆகியோருடன் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை உசுப்பூர் ரயில்வே கேட் அருகே பழனிச்சாமி என்பவரிடம் ரூ 500 வழிப்பறி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisment

இதற்காக இவர்களைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி செய்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து ரவுடி நவின் தப்பிக்க முயற்சித்த போது அவருக்குக் கையில் முறிவு ஏற்பட்டது. அதன் பின்னர் அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

Chennai chidamparam Cuddalore police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe