Advertisment

மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! 

CUDDALORE DISTRICT INCIDENT CHIEF MINISTER MKSTALIN FUND

கடலூர் மாவட்டத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், தீர்த்தனகிரி மதுரா கள்ளயங்குப்பம் கிராமம், பொட்ட கரைமேடு காலனியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரின் மனைவி சிவசங்கரி (வயது 33) நேற்று (23/07/2022) பிற்பகல் சுமார் 02.45 மணியளவில் அவர்களது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக வீட்டின் கான்கிரீட் மேற்கூரையின் அடிப்பகுதி அவர் மீது இடிந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.

Advertisment

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Announcement Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe