Advertisment

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க கடலூர் மாவட்ட விவசாயிகள் முடிவு!

cuddalore district farmers meeting  take decision

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட குழு கூட்டம் கடலூரில் இன்று (18/07/2021) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் வி.சுப்பிரமணியன்,மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட துணை தலைவர்கள் ராமச்சந்திரன், கற்பனை செல்வம், மகாலிங்கம், மாவட்ட இணைச்செயலாளர்கள் சதானந்தம், முர்த்தி, சரவணன், ஜெகதீசன், மாவட்டகுழு உறுப்பினர்கள் செல்வகுமார், காளிகோவிந்தராஜன், ஜீவா, கொளஞ்சியப்பன், வெங்கடேசன், முருகன், குமரகுருபரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விரிவாக பேசினார்கள். மேலும் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள், மின்சார ஒழுங்குமுறை சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லி மாநகரில் போராடி வரும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள கடலூர் மாவட்டத்திலிருந்து 25- க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டது.

Advertisment

'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தையொட்டி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆகஸ்டு 9- ல் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் அதிக அளவில் விவசாயிகளை திரட்டி கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

Advertisment

Farmers Cuddalore district
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe