கூலித் தொழிலாளியின் மனிதநேயம்; தலைமை செயலாளர் பாராட்டு

cuddalore district daily wage great action chief secretary congrats

தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்அண்மையில் கடிதம் எழுதி இருந்தார். அதில், “உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும்மக்களை சிரமத்திற்கு ஆளாக்காத வகையில்தூய்மையாகவும்நேர்த்தியாகவும் மயானங்களை அமைக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது என்பதை மாவட்ட ஆட்சியர்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். ஏற்கனவே மயானங்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்தால் அதில் எந்த பிரச்சனையும் இல்லை. பல இடங்களில் உள்ள மயானங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளன. அதிலும் குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் நடைபெறும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லை. எனவே சுற்றுச்சுவர், கொட்டகை அமைத்துபூச்செடிகள் மற்றும் மரங்களை நடுவதன் மூலம்'பசுமை மயானங்களை' உருவாக்கலாம்.

மக்கள் அமருவதற்கு இருக்கை வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்ட வசதிகளை வழங்க உங்கள் பகுதியில் உள்ள சேவை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் சேவையையும் பயன்படுத்தலாம். இது நிச்சயமாக மயானங்களின் ஒட்டுமொத்த சூழலையும் மேம்படுத்தும். இறந்தவர்கள்உடலுடன் வரும் பொதுமக்களுக்கு இது நிவாரணம் அளிக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போன்ற சிறந்த மயானங்களை நீங்கள் உருவாக்கலாம் மற்றும் அதைப் பிரதிபலிக்கும் வகையில் மற்றவர்களை ஊக்குவிக்கலாம். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் இரண்டின் பிம்பத்தையும் மேம்படுத்த இது பெரிதும் உதவும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை தயவு செய்து செய்யுங்கள்” எனத் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மங்களூர் ஊராட்சி ஒன்றியம், அரங்கூர் ஊராட்சியில் வசிக்கும் விவசாய தினக்கூலி அர்ச்சுனன் அதே ஊரில் அமைக்கப்பட்டிருந்த மயானக் கொட்டகையையும் அதைச் சுற்றியுள்ள பகுதியையும்தன்னுடைய சொந்த செலவில் முற்புதரை அகற்றி இடத்தை சமன் செய்து மரக்கன்றுகள் மற்றும் பூச்செடிகள் வைத்து அழகாக பராமரித்து வருகிறார்.

இது குறித்து அரங்கூர் கிராமத்தில் ஆதி திராவிட மக்கள் பயன்படுத்தும் மயானத்தை ஆய்வு செய்து அந்த மயானத்தில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுதென்னை மரம், மாமரம் போன்ற நிழல் தரும் மரங்களும்பலன் தரும் பழ மரங்களும் நடப்பட்டு இருப்பதைப் பற்றி மாவட்ட ஆட்சியர்தலைமை செயலாளர் இறையன்புவிற்கு அறிக்கை அனுப்பியிருந்தார். மேலும் அதில் அம்மரங்களையெல்லாம் அ.அர்ச்சுனன் (வயது 70) என்பவர் நட்டு பராமரிப்பு செய்கிறார் என்கிற தகவலையும் தெரிவித்திருந்தார்.

விவசாயக் கூலியாக இருந்தாலும்மயானத்தில் மரங்களை நட்டு மரகதச் சோலையாக மாற்றிய அ.அர்ச்சுனன் என்பவரை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமைச் செயலகத்திற்கு வரவழைத்து அவருக்குப் பொன்னாடை போர்த்தி,பாராட்டி ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் அளித்தார். மேலும் அந்த மயானத்தில் சுற்றுச்சுவர் கட்டி, பாசன நீர் வசதி ஏற்படுத்தி நன்றாகப் பராமரிக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியருக்கு கடிதமும் எழுதியுள்ளார்.

Cuddalore iraianbu
இதையும் படியுங்கள்
Subscribe