Skip to main content

கடலூர்: இரவு பகல் பாராமல் சென்னையிலிருந்து வந்தவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்திய அதிகாரிகள்...

Published on 02/05/2020 | Edited on 02/05/2020

 

Cuddalore


கடலூர் மாவட்ட தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் கல்லூரியில் சென்னையிலிருந்து வந்தவர்களைத் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள விளாங்காடு, கழுதூர், தொண்டங்குறிச்சி, காஞ்சிராங்குளம், சிறுப்பாக்கம், தொழுதூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சென்னை கோயம்பேட்டில் வேலை செய்கிறாக்ரள். அங்கிருந்து சுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்துள்ளனர். மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 71 பேர், வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 31 பேர் உட்பட 611 பேர்  கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
 

அப்படி வந்தவர்களை விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன் குமார் மற்றும் வட்டாட்சியர் கவியரசு, திட்டக்குடி வட்டாட்சியர் செந்தில்வேல், வட்டாட்சியர் ரவிச்சந்திரன், வேப்பூர் வட்டாட்சியர் கமலா, விருத்தாசலம் மற்றும் வேப்பூர், திட்டக்குடி ஆகிய தாலுகாக்களில் உள்ள அனைத்து ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பணியாளர்கள் மூலம் இரவு பகல் பாராமல் சென்னையிலிருந்து வந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரி, ராமநத்தம் நாவலர் நெடுஞ்செழியன் கல்லூரி, வேப்பூர் ஜெயப்பிரியா பள்ளி வளாகம் என பல்வேறு இடங்களில் அவர்கள் அனைவரையும் கொண்டுசென்று இடைவெளிவிட்டு தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.
 

http://onelink.to/nknapp

 

இவர்களில் கொளஞ்சியப்பர் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டு இருந்தவர்கள் 73 பேர் ரத்தம், உமிழ்நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் ஏழு பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மாவட்டத்தில் 3,796 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 27 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டது. இதில் 26 நபர்கள் நோயிலிருந்து குணமாகி வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் ஒரே ஒருவர் மட்டும் சிகிச்சையில் உள்ளார். 
 

 

மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், கடலூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் ஏற்கனவே செக்போஸ்ட் அமைத்து கண்காணித்து வரப்படுகிறது. நேற்று முதல் வெளி மாவட்டத்தில் இருந்து கடலூர் மாவட்டத்தில் நுழைவதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு அவை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசின் அவசிய அவசர பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அத்தியாவசியப்  பொருட்களை ஏற்றி வரும்  வாகனங்களைக் கூட  உள்ளே மக்கள் யாராவது பயணிக்கிறார்களா என்று காவல்துறையினர் தீவிர சோதனை செய்து வருகிறார்கள். எனவே பொதுமக்கள் அனைவரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அப்படி மீறி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளார். இந்தநிலையில் நாளை மாவட்டம் முழுவதும் காலை முதல் இரவு வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொட்டாலே உதிர்ந்து விழும் கட்டிடம்; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Recommendation to take action against the authorities as  building has been constructed in substandard manner

சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையிலான சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் வேலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை வேலூர் அரசு பழைய மருத்துவமனை, வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகம், அப்துல்லாபுரத்தில் உள்ள சிறிய டைட்டில் பூங்கா கட்டுமான பணி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

அப்துல்லாபுரத்தில் கட்டப்பட்டு வரும் சிறிய டைட்டில் பூங்கா பணி கடந்த ஜனவரி மாதமே முடிக்கப்பட வேண்டிய நிலையில் ஒப்பந்ததாரர் முடிக்காததால் அவருக்கு 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அடுத்த எட்டு மாத காலங்களுக்குள் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 29 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட மகளிர் தங்கும் விடுதியை ஆய்வு மேற்கொண்ட போது கட்டிடம் முறையாக தரம் அற்று கட்டப்பட்டிருப்பதாகவும், ஒரு சில இடங்களில் தொடும்போதே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்தது.

Recommendation to take action against the authorities as  building has been constructed in substandard manner

மேலும் கட்டிடத்தின் பகுதிகள் மிகுந்த விரிசலுடன் காணப்படுவதால் அதிர்ச்சி அடைந்த உறுதிமொழி ஆய்வு குழு ஏழை எளிய மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு ஒதுக்கிய நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை என்றும், இது மன்னிக்க முடியாத தவறு. இந்த கட்டிடம் வரும் காலத்தில் பேரிடர் காலங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும், ஆகவே மாவட்ட ஆட்சியர், நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து இந்த கட்டிடத்தை முழுமையாக ஆய்வு செய்து இதன் தரம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். அறிகையின் முடிவில் தரமற்று கட்டப்பட்டது தெரியவந்தால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பதோடு அவரை பிளாக் லிஸ்டில் போட வேண்டும் என்றனர்.

மேலும் இக்கட்டிட கட்டுமான பணியை மேற்பார்வை செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் கட்டிடம், கூடுதல் ஆய்வகங்கள் வேண்டும் என்பதால் அரசு முன்னுரிமை அடிப்படையில் உரிய நிதியை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்கிறது என்றும் கூறினார்.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.