
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் வைரஸ் பரவலும், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 10-ஆம் தேதி காலை 04.00 மணி முதல் மே 24ஆம் தேதி காலை 04.00 மணிவரை 15 நாட்களுக்குத் தமிழகத்தில் இந்த ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கரோனா பாதிப்புகளைப் பொறுத்தவரை தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 29,272 பேருக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 298 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 16,178 ஆக அதிகரித்துள்ளது. இதுமட்டுமின்றி, முன்கள பணியாளர்கள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த வைரஸால் தொடர்ந்து பாதிக்கபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமுரிக்கு கரோனா உறுதியான நிலையில் அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.