Advertisment

கடலூரில் இரட்டை சதமடித்த கரோனா! பீதியடைய வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!  

cuddalore District Collector say not to panic!

உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொது மக்களை பாதுகாப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை இரட்டை சதம் அடித்துள்ளது.

Advertisment

கடலூர் மாவட்டத்திலிருந்து டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என கடந்த 29-ஆம் தேதி வரை கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 26 ஆக இருந்தது. மே 30-ஆம் தேதியோடு அவர்கள் அனைவரும் குணமடைந்து விடுகளுக்கு திரும்பினர். கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற வேண்டிய சூழலில் கடலூரிலிருந்து புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்த 68 வயது முதியவருக்கு தொற்று உறுதியாகி மீண்டும் கணக்கு தொடங்கியது.

Advertisment

இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து கடலூர் மாவட்ட கிராமங்களுக்கு வந்தவர்களால் கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 107 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் இன்று புதிதாக 68 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி கரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 228 ஆகியுள்ளது. இவர்களில் ஏற்கனவே குணமடைந்த 26 பேர் தவிர 202 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

cuddalore District Collector say not to panic!

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், “ கடலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட எல்லைகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயம்பேடு மார்க்கெட் மற்றும் வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களை கண்காணிக்க அனைத்து ஊராட்சிகளிலும் அறிவுறுத்தியுள்ளோம். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வெளி மாவட்டத்தில் பணிபுரிந்த கடலூர் மாவட்ட மக்கள்தான். மாவட்ட மக்கள் என்பதால் அவர்களுக்கான சிகிச்சை பணிகள் மேற்கொள்ள வேண்டிய கடமை உள்ளது. கரோனா பாதிப்பு அதிகம் உள்ளதே என பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்.

நிபந்தனைகளின்படி, கடைகள் திறக்க அனுமதிக்கப்படுள்ளது. மாலை 5 மணிக்கு மேல் திறக்கும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடலூர் மாவட்டத்தில் பாதிப்பு அதிகம் என்றாலும் மாவட்டம் இதுவரை ஆரஞ்சு பட்டியலில்தான் உள்ளது. தற்பொது எந்த பட்டியலில் உள்ளது என மத்திய அரசுதான் அறிவிக்கும். அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும்” என்றார்.

District Collector corona virus Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe