புவனகிரி அருகே தலித் ஊராட்சித் தலைவரை அவமானப்படுத்திய துணைத் தலைவருக்கு மாவட்ட ஆட்சியர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே தெற்கு திட்டை ஊராட்சி தலித் பெண் தலைவரை ஊராட்சி கூட்டங்களில் தரையில் அமரவைத்து, அவரை தேசியக் கொடியை ஏற்றவிடாமல் அவமதிப்பு செய்த ஊராட்சி துணைத் தலைவர் மோகன் ராஜன், வரும் 15ஆம் தேதிக்குள், கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரியை நேரில் சந்தித்து, எழுத்துப் பூர்வமாகவிளக்கக் கடிதம் கொடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அப்படி இல்லை எனில், உள்ளாட்சிச் சட்டத்தின் அடிப்படையில் தங்களின் பதவி பறிக்கப்படும் என அந்த விளக்க நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.