Skip to main content

கடற்கரை சுற்றுலாவை மேம்படுத்த கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Published on 19/11/2022 | Edited on 19/11/2022

 

Cuddalore District Collector inspection to improve beach tourism!

 

கடலூர் மாவட்டத்தில் மீன்வளத்துறை வாயிலாக மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

 

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிதம்பரம் அருகேயுள்ள சாமியார்பேட்டை மீனவ கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு வானிலை முன்னெச்சரிக்கை செய்திகள் முறையாகக் கிடைக்கப்பெறுகிறதா எனவும், மீனவர்கள் வானிலை எச்சரிக்கை அறிவிப்புகளை முறையாகப் பின்பற்றுகின்றனரா எனவும் சாமியார்பேட்டை மீன்பிடி இறங்குதளத்தில் மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மீன்வளத்துறையின் மூலம் அவ்வப்போது கொடுக்கப்படும் வானிலை எச்சரிக்கையினை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அப்பகுதி மீனவ மக்களிடம் அறிவுறுத்தினார்.

 

இதனைத் தொடர்ந்து சாமியார்பேட்டை மீனவ கிராமத்தில் சுற்றுலாவை மேம்பாடு செய்வது தொடர்பாக தகுதியான இடத்தினை தேர்வு செய்வது குறித்து ஆய்வு செய்தார்.

 

பின்னர், காட்டுமன்னார்கோயில் வட்டம், லால்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் அரசு மீன்குஞ்சு வளர்ப்பு பண்ணையில் கட்லா, ரோகு, மிர்கால் மற்றும் சாதாகெண்டை வகை மீன் குஞ்சு வளர்ப்புப் பணிகளை ஆய்வு செய்தார். மேலும், அப்பண்ணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சினை மீன் வளர்ப்பு மற்றும் கெண்டை மீன் குஞ்சு பொறிப்பக கட்டுமானப் பணிகள் மற்றும் விரால் மீன் குஞ்சு பொறிப்பக கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

 

 

மீன் குஞ்சுகளை இருப்பு செய்து உள்நாட்டு மீன் உற்பத்தி மற்றும் மீன் வளர்ப்பு விவசாயிகளின் பொருளாதாரத்தினை மேம்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்கும்படி மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இவருடன் வருவாய்த் துறையினர் உள்ளிட்ட மீன்வளத்துறையினர் உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மாடு மோதி விபத்து; சிறப்பு உதவி ஆய்வாளர் பலி!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
Cuddalore dt Tittakudi police station ssi Bharathidasan incident

கடலூர் மாவட்டம் திட்டக்குடி காவல் நிலையத்தில் சிறப்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாரதிதாசன். இவர் திட்டக்குடி - விருத்தாசலம் நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென சாலையில் வந்த மாடு ஒன்று பாரதிதாசனின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதனால் கீழே விழுந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பாரதிதாசன் மீது அச்சமயத்தில் அங்கு வந்த அரசு பேருந்து அவர் மீது ஏறியது. இந்த விபத்தில் பாரதிதாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்று சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் நாள்தோறும் விபத்துகளைச் சந்திப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்துப் பல முறை புகார் அளித்து முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாடு மோதிய விபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Cuddalore dt Tittakudi police station ssi Bharathidasan incident

முன்னதாக விருத்தாசலம் அருகே பரவலூர் - கோமங்கலம் இடையே பைக்கில் சென்ற இரு இளைஞர்கள் லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்தை வேடிக்கை பார்க்க அப்பகுதியில் குவிந்த கூட்டத்தின் மீது கார் ஒன்று மோதியது. இதில் 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் தொடர்புடைய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதே சமயம் மற்றொரு விபத்திற்குக் காரணமாக கார் ஓட்டுநரைப் பிடித்து அங்கிருந்தவர்கள் சரமாரியாகத் தாக்கினர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் காரணமாக விருத்தாசலம் - சேலம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் வெகுவாக அவதியடைந்தனர். 

Next Story

கடலூர் மத்தியச் சிறையில் இரு கைதிகளுக்கு இடையே மோதல்

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Clash between two inmates in Cuddalore Central Jail

கடலூர் மத்திய சிறையில் இரு கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு 1500க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அழகுமுத்து என்பவரும், நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து பகுதியைச் சேர்ந்த கோபி என்பவரும் கடந்த ஒரு வருடமாக விசாரணைக் கைதிகளாக  அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று (ஜூலை. 11) இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த சிறை காவலர்கள் அங்கு சென்று இருவரையும் விலக்கி விட்டனர். அதன் பின்னர் இருவரையும்  தனித்தனி அறையில் காவலர்கள் அடைத்தனர். காயம் அடைந்த கைதி கோபிக்கு உங்கள் சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் கடலூர் மத்திய சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The website encountered an unexpected error. Please try again later.