Advertisment

சமூகப் பணியில் தீவிரம் காட்டிவரும் சிதம்பரம் காவல்துறை !

கடலூர் மாவட்டம், சிதம்பரம் எடத் தெருவைச் சேர்ந்த ஒருவர் கரோனா தொற்று காரணமாக அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் பேரில் சிதம்பரம் காவல்துறை ஆய்வாளர் முருகேசன், உதவி ஆய்வாளர் சுரேஷ்முருகன் உள்ளிட்ட காவல்துறையினர், சிதம்பரம் எடத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றியுள்ள தெருக்களைத் தடுப்பு கட்டைகள் அமைத்து இரவு, பகல் பாராமல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் அந்தப் பகுதி முழுவதும் ஒலிபெருக்கி அமைத்து அவ்வப்போது எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

Advertisment

cuddalore district chidambaram police peoples service

இரவு, பகல் நேரத்தில் சிதம்பரம் டி.எஸ்.பி கார்த்திகேயன் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வேதனை கலந்த குரலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வேண்டுகோள் விடுத்து வருகிறார்.மேலும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு மொபைல் ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி மற்றும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் வீட்டுக்கே கிடைக்க சிதம்பரம் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளனர்.

prevention coronavirus police Chidambaram Cuddalore district
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe