cuddalore district chidambaram panchayat peoples masks

Advertisment

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி. கொத்தங்குடி ஊராட்சி உள்ளது. இங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஊராட்சி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கபசுர குடிநீர் குடித்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்ற தமிழக அரசின் வேண்டுகோளுக்கிணங்க சி.கொத்தங்குடி ஊராட்சி மன்ற தலைவர் அம்சா வேணுகோபால் மற்றும் பிச்சாவரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர் வேணுகோபால் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 50 கிராம் கபசுர குடிநீர் பாக்கெட் மற்றும் இரண்டு முகக் கவசங்களை வழங்கினார்கள்.

மேலும் வெளியே செல்லும்போது முகக் கவசங்கள் இல்லாமல் செல்லாதீர்கள் எனக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அதேபோல் கபசுர குடிநீர் தினந்தோறும் குடிக்கக்கூடாது என்றும் எப்படிக் காய்ச்சிக் குடிக்க வேண்டும் என்பது தொடர்பான செயல் முறையையும் பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினர். இது மக்கள் மத்தியில் கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.