/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chi3_0.jpg)
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சி ஆணையராக பணியாற்றிவந்த சுரேந்தரஷா மற்றும் நகராட்சி ஊழியர் மீது, நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சத்துணவு அமைப்பாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சிதம்பரம் சார் ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chi2_1.jpg)
மேலும் சிதம்பரம் நகராட்சியில் ஒப்பந்ததாரருக்கு வைப்புத்தொகையை இரண்டுமுறை வழங்கியது, பொதுமக்கள் தொழில் வரி, சொத்து வரி உள்ளிட்டவைகளுக்கு பணம் கட்டியதை செக் மூலம் வாங்கியதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. அப்படி வாங்கப்பட்ட செக் இன்னும் வங்கிக்கு செல்லாமல் அப்படியே உள்ளது.இந்த குற்றச்சாட்டுகள் கடந்த ஒரு வாரமாக சிதம்பரம் நகராட்சியில் நிலவி வந்தது. இதனால் நகராட்சி தினமும் பரபரப்பாக இருந்தது.
இந்த நிலையில் சிதம்பரம் நகராட்சி ஆணையராக இருந்த சுரேந்தர ஷா, மேட்டூர் நகராட்சி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை அறிந்த சிதம்பரம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த செய்தியை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)