cuddalore district, chidambaram assembly constituency tamilnadu cm

Advertisment

கடலூர் மாவட்டம், சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குமராட்சி ஒன்றியம் அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம் கிராமத்தில், கொள்ளிடம் ஆற்றின் இடது கரையில் ரூபாய் 14.74 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள தடுப்பணை பணிகளை சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (13/02/2021) துவக்கி வைத்தார்.

அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம் கிராமத்தில் நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வின் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அருணகிரி, ஊராட்சி மன்றத் தலைவர் கோமதி அன்பழகன், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர்கள் ரமேஷ், முத்துக்குமரன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ரவி, சுந்தரம், திருஞானம், முத்து, ஜவான்குமார், லெட்சுமனன், செல்வழகன், பந்தள பூபதிஉள்ளிட்ட நிர்வாகிகள்கலந்து கொண்டனர்.