Advertisment

கோழி தீவனத்திற்காக பதுக்கி வைத்திருந்த 1,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

cuddalore district 1000 kg ration rice

கடலூர் மாவட்டம், பண்ருட்டிஅடுத்த திருவாமூரில் அரிசி கடத்திப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரேஷன் அரிசி தடுப்பு பிரிவான மாவட்ட பறக்கும் படைக்கு தகவல் கிடைத்தது.

Advertisment

அதன் பேரில் பறக்கும் படை தாசில்தார் பூபாலசந்திரன் தலைமையிலான அதிகாரிகள் திருவாமூர் காமாட்சிபேட்டையில் உள்ள இரண்டு தனியார் கோழி பண்ணையில் சோதனை செய்தனர். அப்போது கோழிப் பண்ணையில் கோழி தீவனத்திற்காகப் பயன்படுத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,000 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Advertisment

இந்த சோதனையில் குற்றப்புலனாய்வு ஆய்வாளர் கல்பனா, வட்ட வழங்கல் அலுவலர் கவுரி, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் விஜயன், ஆளவந்தார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Ration Rice Cuddalore district
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe