Advertisment

நிலத்தடி நீரை காத்த நாகச்சேரிகுளம் வற்றியது:பொதுமக்கள் வேதனை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரத்தில் தீர்த்த குளங்களாக கருதப்படும் அண்ணாகுளம், தில்லையம்மன் குளம், ஞான பிரகாசம், ஓமக்குளம், நகச்சேரிகுளம், இளமையாக் கினார்குளம்,காரியபெருமாள் குளம் உள்ளிட்ட 9 குளங்கள் உள்ளது. இந்த குளங்களை சரியான முறையில் பராமரிக்காததால் குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை கொட்டி குளத்தை மூடியுள்ளனர்.

Advertisment

p

வீடுகளின் சாக்கடை கழிவுகளும் குளத்தில் விடுவதால் அசுத்தம் அடைகிறது. மேலும் குளத்தின் கரைகளில் அக்கிரமிப்பு செய்துள்ளதால் மிகபெரிய குளங்களாக இருந்த இவைகள் தற்போது பெரிய குட்டைகளாக காணப்படுகிறது. இந்த குளங்கள் அனைத்திலும் தண்ணீர் இருந்தால் கோடையில் சிதம்பரம் உள்ளிட்ட சுற்றுவட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சனை ஏற்படாது. நிலத்தடிநீர் மட்டமும் குறையாமல் உவர்நீர் நிலத்தடியில் உட்புகாமல் இருக்கும்.

p

Advertisment

இந்த குளங்களில் நாகச்சேரி குளம் மிகப் பெரிய குளமாகும். தற்போது கோடையை சமாளிக்கமுடியமல் குளம் வற்றியுள்ளது. கடல்போல் காட்சியளிக்கும் குளம் வற்றியதை பார்த்தால் வேதனையாக உள்ளது. குளத்தை சுற்றி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். தற்போது மழைபெய்தாலும் குளத்தில் பிளாஷ்டிக் கழிவுகள் அதிகம் உள்ளதால் குளத்தில் நிற்கும் மழைநீர் நிலத்தடிக்கு உள்ளே செல்லாது. எனவே இந்த குளத்தை தூர்வாறி குளத்தில் உள்ள பிளாஷ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அரசு செய்யும் என்று எதிர்பார்த்து இருந்தால் இப்போது நடக்காது எனவே தன்னார்வலர்கள், பொதுநல அமைப்பினர் முன்வந்து குளத்தில் கிடக்கும் பிளாஷ்டிக்கையாவது அகற்ற முன் வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளர் .

நாகச்சேரி குளத்தில் தண்ணீர் இருந்து வந்தால் சுற்றுவட்டத்தில் உள்ள பகுதிகளில் குடிநீர் ஆழ்குழாய்களில் தண்ணீர் வற்றாது. தற்போது வற்றியுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்படும். எனவே வற்றியுள்ளபோதே குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி குளத்திலுள்ள மண்ணை எடுத்து ஆழப்படுத்தினால் மழைகாலங்களில் அதிகஅளவு மழைநீரை தேக்கமுடியும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

chidamparam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe