Skip to main content

மகனை கல்லால் அடித்துக் கொன்ற தந்தை! தண்டனை அறிவித்த நீதிமன்றம்! 

Published on 21/04/2022 | Edited on 21/04/2022

 

Cuddalore court announces sentence for old man

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பெரியகாப்பான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம்(61). இவரது மனைவி மாலா. இவர்களுக்கு சிவகுமார், சிவா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். பரமசிவம் தனது மனைவி, மகன்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இளைய மகன் சிவா சென்னையில் வேலை செய்து வருகிறார். முதல்மகன் சிவகுமாருக்கு திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், எந்த வேலைக்கும் செல்லாமல், மதுப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்து வந்துள்ளார். 


இந்நிலையில் கடந்த 5.8.2019 அன்று இரவு 8 மணி அளவில், வீட்டிற்கு சென்ற சிவகுமார், தனது தந்தை பரமசிவத்திடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பரமசிவம், வீட்டின் முன்பு கிடந்த கல்லால் தனது மூத்த மகனான சிவகுமாரை தலையில் அடித்து கொலை செய்துள்ளார். 

 

Cuddalore court announces sentence for old man

 

இதுகுறித்து பெரியகாப்பான்குளம் கிராம நிர்வாக அலுவலர் அன்புமணி 6.8.2019 ஆம் தேதி அளித்த புகாரின் பேரில் நெய்வேலி தெர்மல் நிலைய காவல் ஆய்வாளர் லதா கொலை செய்யப்பட்ட இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை கைது  செய்தார்.  


இவ்வழக்கு விசாரணை விருத்தாசலம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் விஜயகுமார் ஆஜராகி, வாதாடிய நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி பிரபா சந்திரன், பெற்ற மகனை அடித்து கொலை செய்த தந்தை பரமசிவத்திற்கு ஒரு ஆயுள் தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் வழங்கி அதிரடி தீர்ப்பை வழங்கினார். 


பின்னர் காவல்துறையினரின் பாதுகாப்புடன் ஆயுள் தண்டனை கைதி பரவசிவத்தை கடலூர் மத்தியச் சிறைக்கு கொண்டு சென்றனர்.

 

சார்ந்த செய்திகள்