போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு கரோனா!!

corona

கடலூர் மாவட்டம் கிள்ளை அடுத்து உள்ளது முடசல் ஓடை. இந்த பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, கிள்ளை வடக்கு சாவடி பூக்கடை தெருவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஜூன் 29ல் கடத்தி சென்று இருவரும் திருமணம் செய்துள்ளனர். பிறகு வடலூரில் தலைமறைவாக இருந்து தங்கள் ஊருக்கு வரும்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் கிள்ளை போலீசாரிடம் புகார் கொடுத்ததின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கொண்டுபோய் ஒப்படைத்தனர்.

தற்போது அந்த சிறுவனுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் கடத்தி சென்ற சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பதற்காக சிறுவனை அழைத்து சென்ற கிள்ளை போலீசார் உள்ளிட்ட அனைவருக்கும் நேற்று கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

corona Cuddalore
இதையும் படியுங்கள்
Subscribe