Advertisment

10 க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் வணிக வளாகங்களையும் மூட கடலூர் ஆட்சியர் உத்தரவு

சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 165 நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 1,98,214 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 8000 ஐ கடந்துள்ளது. இந்நிலையில் பல்வேறு வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் 276 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

Advertisment

cuddalore collector order

தமிழகம் முழுவதும் கரோனாபாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கரொனோ வைரஸ் பரவாமல் இருக்கும் பொருட்டு ஏற்கனவே மாவட்டத்தில் கல்விநிறுவனங்கள், பூங்காக்கள், திரையரங்குகள், மதுபானக் கூடங்கள் மற்றும் சுற்றுலா மையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் விதமாக அத்தியாவசிய பொருட்களான உணவுபொருட்கள், பால், மருந்து போன்ற நிறுவனங்களைத் தவிர்த்து 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணி புரியும் வணிகவளாகங்களை 31-ஆம் தேதி வரை மூட மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

corona virus Cuddalore District Collector
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe