cuddalore collector imposes strict regulations for lockdown

Advertisment

கரோனா நோய் பரவலை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவித்து நடைமுறையில் உள்ளது. அதேபோல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.அதையடுத்து கடலூர் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு 95% கடைபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது, மக்களுடைய ஒத்துழைப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி நேற்று பல்வேறு இடங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூரில் திருவந்திபுரம்,பில்லாலி, செம்மண்டலம்,பாதிரிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.

அப்போது பாதிரிக்குப்பம் பெட்ரோல் பங்க் அருகில் ஊரடங்கை மீறி இயங்கிய மரவாடியை மூடி 'சீல்' வைக்க உத்தரவிட்டார். அதையடுத்து வருவாய்த்துறை ஊழியர்கள் அந்த கடையை பூட்டி சீல் வைத்தனர்.

Advertisment

cuddalore collector imposes strict regulations for lockdown

மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி 'கரோனாவை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. எதற்காக வெளியே சுற்றி வருகிறீர்கள்,ஊரடங்கை மீறினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்று எச்சரித்து அனுப்பினார். மேலும் கார் மற்றும் ஆட்டோ,இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.