Advertisment

மாவட்ட ஆட்சியரின் கார் மோதி விவசாயி பலி!

கடலூர் மாவட்ட ஆட்சியராக உள்ளவர் அன்புச்செல்வன். இவர் தமது சொந்த பணி காரணமாக கும்பகோணம் சென்று விட்டு காரில் சேத்தியாதோப்பு வழியாக கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சோழ தரம் அருகே மாமங்கலம் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பெரியவரின் மீது கார் மோதியது. கார் மோதியதில் பெரியவர் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டார்.

Advertisment

Cuddalore collector and farmer issue

அவரை மீ்ட்டு ஆட்சியர் தனது காரில் ஏற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து போனதாக தெரிவித்தனர். ஆட்சியர் உட்பட அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். தகவல் கிடைக்கப் பெற்று சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ஜவகர்லால் நேரு எஸ்.ஐ.இளையராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அவர்கள் நடத்திய விசாரணையில், இறந்து போன விவசாயி மங்கலத்தைச் சேர்ந்த ராமசாமி என்பதும் அவர் சோழதரத்தில் உள்ள வங்கிக்கு சென்று பணிகளை முடித்துக் கொண்டு தமது ஊரான மாமங்கலம் நோக்கி வந்துகொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

Advertisment
Farmers cuddalore collector
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe