Advertisment

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து விவசாயிகளிடம் அச்சத்தைப் போக்க மத்திய அரசு முன்வர வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கடவா சேரி கிராமத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் சஞ்சீவி, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் மாநில பொது செயலாளர் ரவீந்திரன், சேத்தியாதோப்பு அணைக்கட்டு நீரினை பயன்படுத்துவோர் சங்கம் தலைவர் சரவணன், தமிழக விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத்தின் துணைத் தலைவர் மணிவண்ணன், தமிழக விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத்தின் இணைச் செயலாளர் பாபு, வீராணம் ஏரி பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பாலு, பாசி ஓடை பாசன சங்கத்தின் செயலாளர் முனுசாமி, விவசாயிகள் ஜெகன், பன்னீர்செல்வம், சிற்றரசு, உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.l

Advertisment

h

கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த ஆலோசனை நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாய சங்கங்கள் பொதுமக்கள், என பல்வேறு தரப்பினர் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு உரிய நிபுணர்களை ஒருங்கிணைத்து ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து விவசாயிகள் இடையே நிலவும் அச்சத்தை போக்க மத்திய அரசு முன் வரவேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டம் எந்த தீங்கும் விளைவிக்காது என்று கூறும் மத்திய அரசு ஏன் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல் திட்டத்தை நிறைவேற்ற முயல்கிறது.

Advertisment

எனவே ஹைட்ரோகார்பன் திட்டம் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் திட்டமாக இருந்தால் ரத்தத்தை கொடுத்தது போராட்டத்தை தடுத்து நிறுத்துவோம். வரும் 18ஆம் தேதி தஞ்சையில் தமிழகத்தில் உள்ள விவசாய சங்கங்கள் மற்றும் டெல்டா பகுதி அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்ப்பு போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும். இதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட போராட்டத்திற்கு முன்னெடுப்போம். இந்நிலையில் மக்கள் மத்தியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக கூறினார்.

cuddalore discrit
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe