கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார்( 27) உளுந்தூர்பேட்டை பத்தாவது பட்டாலியன் ஆயுதப்படை போலீஸில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில வருடமாக இவருக்கு திருமணத்திற்காக பெண் பார்த்து வந்துள்ளனர்.

பெண் பார்க்க சென்ற போதெல்லாம் உறவினர் பெண் உள்பட அனைத்து இடத்திலும் ராஜேஷ்குமாருக்கு நாக தோஷம் இருப்பதாக கூறி திருமணம் தடைப்பட்டது. இதனால் விரக்தியில் மனமுடைந்த ராஜேஷ்குமார் காளகஸ்தி சென்று தோஷத்தை கழிக்க விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது மதுபானத்தில் வயலுக்கு பயன்படுத்தக்கூடிய பூச்சி மருந்தை கலந்து குடித்துள்ளார். இந்த நிலையில் ராஜேஷ்குமார் அறைக்கு அவர் தந்தை ராதாகிருஷ்ணன் சென்று பார்த்தபோது வாயில் நுரைதள்ளி ராஜேஷ்குமார் இறந்துள்ளார். நாகதோஷத்தால் போலீஸார் உயிரை மாய்த்துகொண்ட சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பாக இருந்தது.
நாகதோஷம் என்ற நம்பிக்கை இன்னும் பல ஆயிரம் குடும்பங்களை அழித்தாலும் மக்களின் நம்பிக்கையில் நீங்கா இடம்பிடித்துள்ள தோஷங்களை அகற்றாவிடில் இன்னும் பல லட்சம்,கோடி. குடும்பங்கள் அழிவுநிலை நோக்கியே செல்லும் என்று சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.