தமிழகத்தில் கரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தமிழக அரசு 144 தடை உத்தரவை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு அமல்படுத்தியது. பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது 21 நாட்கள் ஊரடங்கில் இருக்குமாறு கூறினார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இதனையொட்டி தமிழகத்திலுள்ள 95 சதவீதமான மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே உள்ளனர். இதில் சிலர் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க மட்டும் வெளியே வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு நந்தனார் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள திறந்த வெளி மைதானத்தில் 12 பேர் புதன் கிழமை கிரிக்கெட் விளையாடினார்கள். இதனை அறிந்த சிதம்பரம் சரக போலீஸ் டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று அவர்களை அழைத்து அமர வைத்து வைரஸ் தொற்று குறித்து அறிவுரை கூறினார். பின்பு ஊரடங்கு உத்தரவு உள்ள 21 நாட்களுக்கும் வீட்டை விட்டு வெளியே வர மாட்டோம், தோப்புக்கரணம் போட்டு உறுதிமொழி எடுக்க கூறினார்கள். இதனைத் தொடர்ந்து அனைவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.