Advertisment

பக்கிங்காம் கால்வாயை சீரழிக்கும் இறால் குட்டையை தடைசெய்ய விவசாயிகள் மனு

கடலூர் மாவட்டம் கிள்ளை அருகே புகழ்பெற்ற பக்கிங்காம் கால்வாய் உள்ளது. இதனை சீரழிக்கும் விதமாக இறால் குட்டையின் கழிவுநீரை தனிநபர் கால்வாயில் விடுகின்றனர். இதனால் பங்கிங்காம் கால்வாயில் உள்ள நீர் உப்புநீராக மாறியுள்ளது. நிலத்தடிநீர் உப்புநீராக மாறியதால் குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோடையில் கால்வாயில் கிடக்கும் நீரை கால்நடைகள் குடிக்கமுடியாமல் அவதி அடைந்து வருகிறது. மேலும் தொடர்ந்து இறால் பண்ணை கழிவுகளை கால்வாயில் விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. கால்வாயின் அருகே பொதுமக்கள் செல்லமுடியவில்லை. அப்படியே சென்றாலும் மூக்கில் துணியை வைத்துக்கொண்டு தான் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

Advertisment

ty

இதனால் சி.மானம்பாடி, பொன்னந்திட்டு, கிள்ளை 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்ட்ட கிராமத்தை சார்ந்த பொதுமக்கள், பக்கிங்காம் கால்வாய் பாசன விவசாயிகள், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கிள்ளை ரவீந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு ஆகியோர் தலைமையில் சிதம்பரம் சார் ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கற்பனைச்செல்வம், சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, சுனில்குமார், கிள்ளை நகர செயலாளர் வினோபா,ஒன்றியக்குழு திருஞானம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Advertisment

இதுகுறித்து திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கிள்ளை ரவிந்திரன் கூறுகையில் விவசாய நிலங்களையும், குடிநீரையும், பாசனத்தை இந்த இறால் பண்ணைகள் பாழ் படுத்தி வருகிறது. சட்டவிரோதமாக நடத்தப்படும் இக்குட்டையை உடனே அகற்ற வேண்டும். சட்ட விரோத செயல்களுக்கு பரங்கிப்பேட்டை மீன்வளத்துறை அதிகாரிகள் உறுதுணையாக உள்ளனர். சரியான நடவடிக்கை இல்லையென்றால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராம மக்களையும் ஒருங்கிணைத்து பரங்கிப்பேட்டை மீன்வளத்துறை அலுவலகம் முன் மிகப் பெரிய முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Cuddalore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe